முகப்பு
தினம் ஒரு தேவாரம்

18. வண்ணங்கள் தாம் பாடி - பாடல் 10

முந்தைய பாடல்களில் தனது வருத்தத்தைத் தெரிவித்த அப்பர் நாயகி (தன்னை சிவபிரான்பால் காதல் கொண்ட ஒரு பெண்மணியாக உருவகித்து, தனது ஏக்கத்தை வெளிப்படுத்திய அப்பர் பிரான்

Updated On : 18 மார்ச், 2016 at 2:53 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:21 PM

பாடல் 10

மழுங்கலா நீறாடும் மார்பர் போலும் மணிமிழலை மேய
மணாளர் போலும்
கொழுங்குவளைக் கோதைக்கு இறைவர் போலும் கொடுகொட்டி
தாளம் உடையார் போலும்
செழுங்கயிலாயத்து எம் செல்வர் போலும் தென்னதிகை
வீரட்டம் சேர்ந்தார் போலும்
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர்
ஐயனாரே

விளக்கம்

மழுங்கலா = ஒளி குறையாத. அழுங்கினார் = துன்பப்பட்டு தம்மை அடைந்தவர். குவளைக் கோதை = குவளை மலரால் ஆகிய மாலையணிந்த உமையம்மை. ஐயுறவு = ஐயம், சந்தேகம், துன்பத்தை களைவாரோ, மாட்டாரோ என்ற ஐயம். கொடுகொட்டி = பறை போன்ற ஒருவித தோல் கருவி.

மிழலை மேய மணாளர் = திருமணக் கோலத்தில் காட்சி அளிப்பவர்; வீழிமிழலையில் வாழ்ந்து வந்த காத்யாயனர் என்ற முனிவர், இறைவனை வேண்டி ஒரு பெண் மகவு பெற்றார். பார்வதி தேவியே குழந்தை வடிவம் எடுத்த அந்த குழந்தை, காத்யாயனி என்ற பெயரில் வளர்க்கப்பட்டது. மணப்பருவம் எய்திய அந்த குழந்தை, சிவபிரானையே மணவாளனாக அடைய வேண்டும் என்று முனிவர் விரும்பினார். ஒரு நாள் சிவபிரான், முனிவரின் இல்லத்திற்கு வந்து, அவரது பெண்ணைத் தனக்கு மணமுடித்துத் தருமாறு வேண்ட, முனிவர் வந்தவரை தனது அடையாளம் காட்டுமாறு வேண்டினார். வந்தவர், திருமால் தன்னை வழிபட்டபோது சமர்ப்பித்த கண்ணினைக் காட்ட, வந்தவர் சிவபிரான் தான் என்பதை உணர்த்த முனிவர், மிகவும் மகிழ்ந்து தனது பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்தார். இதனால் இந்த தலம் திருமணத் தலம் என்று கருதப்படுகின்றது. மகா மண்டபத்தில் இருக்கும் கல்யாண சுந்தரர் சன்னதியில் சிவபிரான் மணக்கோலத்தில், கையில் ஒரு மலரினை ஏந்தி இருப்பதை காணலாம். இந்த நிகழ்ச்சியை உணர்த்தும் வண்ணம், அப்பர் பிரான் மிழலை மேய மணாளர் என்று இங்கே கூறுகின்றார்.

முந்தைய பாடல்களில் தனது வருத்தத்தைத் தெரிவித்த அப்பர் நாயகி (தன்னை சிவபிரான்பால் காதல் கொண்ட ஒரு பெண்மணியாக உருவகித்து, தனது ஏக்கத்தை வெளிப்படுத்திய அப்பர் பிரான்), தனது வருத்தத்தை சிவபிரான் தீர்ப்பார் எனும் நம்பிக்கையை தெரிவிக்கும் முகமாக அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் என்று குறிப்பிட்டு, தன்னை தேற்றிக்கொள்வதை நாம் உணரலாம்.

பொழிப்புரை

ஒளி மழுங்காது வெள்ளி மணியை நிறத்தினில் ஒத்த திருநீற்றினைத் தனது மார்பில் அணிந்தவர், அழகிய திருவீழிமிழலையில் திருமணக் கோலத்தில் விளங்குபவர், செழுமையான குவளை மலர் மாலை அணிந்த உமையம்மைக்குத் தலைவர், தனது ஆடலுக்கு ஏற்ப தாளம் இசைக்கும் கொடுகொட்டி என்ற இசைக் கருவியை உடையவர், கயிலாயத்தில் உள்ள எம் செல்வர், தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் திருவதிகை வீரட்டானத்தில் உறைபவர், தன்னை நினைந்து வருந்தும் அடியார்கள், சிவபிரான் தங்களது இடர்களைத் தீர்ப்பாரோ அல்லரோ என்ற சந்தேகம் ஏதும் கொள்ளாத வகையில் அவர்களது இடர்களைக் களையக்கூடியவர், ஆமாத்தூர் தலத்தில் உறையும் எங்கள் தலைவர் சிவபிரான் மிகவும் அழகியவர் ஆவார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.