முகப்பு
தினம் ஒரு தேவாரம்

39. வெள்ளெருக்கு அரவம் - பாடல் 4

தனது அடியையும் முடியையும் திருமால்

Updated On : 1 அக்டோபர், 2016 at 4:36 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:53 PM

பாடல் 4

தன்னுருவை ஒருவர்க்கு அறிவொணா
மின் உருவனை மேனி வெண் நீற்றனைப்
பொன் உருவனைப் புள்ளிருக்குவேளூர்
என்ன வல்லார்க்கு இல்லை இடர்களே

விளக்கம்
மின்னுருவன் = மின்னல் போன்று ஒளி பொருந்திய மேனியை உடையவன். ஒருவர்க்கு = திருமால், பிரமன் முதலானவர்கட்கு.

Advertisement

பொழிப்புரை
தனது அடியையும் முடியையும் திருமால் பிரமன் முதலான தேவர்கள் எவரும் அறியமுடியாத வண்ணம், மின்னல் போன்று ஒளிவீசும் அழல் உருவத்தனாய் நின்ற பெருமானை, தனது மேனியில் வெண்ணீறு பூசியவனை, பொன் போன்று அழகான உருவத்தை உடையவனை, புள்ளிருக்குவேளூர் இறைவன் என்று சொல்லும் வல்லமை படைத்தார்களுக்கு, இடர்கள் ஏதும் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.