39. வெள்ளெருக்கு அரவம் - பாடல் 5
தீப்பிழம்பாக நின்றவன் சிவபெருமான்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:53 PM
பாடல் 5
செங்கண் மால் பிரமற்கும் அறிவொணா
அங்கியின் உருவாகி அழல்வதோர்
பொங்கு அரவனைப் புள்ளிருக்குவேளூர்
மங்கை பாகனை வாழ்த்த வரும் இன்பே
விளக்கம்
பொங்கரவம் = சினம் பொங்கி படம் எடுத்தாடும் பாம்பு.
Advertisement
பொழிப்புரை
சிவந்த கண்களை உடைய திருமாலும் பிரமனும், அடியையும் முடியையும் அறிய முடியாதபடி, தீப்பிழம்பாக நின்றவன் சிவபெருமான். நெருப்பு நமது உடலை தீய்ப்பது போன்று, நமது உடலை கருகச் செய்யும் விடத்தினை உடையதும், சினம் பொங்கி படம் எடுத்து ஆடும் இயல்பினை உடையதும் ஆகிய பாம்பினைத் தனது உடலில் ஆபரணமாக அணிந்தவனும், உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனை வாழ்த்தினால் நமக்கு இன்பம் உண்டாகும்.