58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 5
மலையினில் தானே தோன்றிய
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:45 PM
சுனையுள் நீல மலர் அன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரி சடைக்
கனையும் பைங்கழலான் கரக் கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே
விளக்கம்
சுனை = மலையினில் தானே தோன்றிய நீர்நிலை. நீல மலர் = கருங்குவளை மலர். புனையும் = அணியும். கனையும் = ஒலிக்கின்ற.
Advertisement
பொழிப்புரை
மலையினில் தானே தோன்றிய நீர் நிலையில் பூக்கும் குவளை மலர் போன்று, கருமை நிறத்தினை கழுத்தினில் உடையவன் சிவபெருமான். பொன் நிறத்தில் காணப்படும் கொன்றை மலரைத் தனது சடையில் அணிபவனும், பசும்பொன்னினால் செய்யப்பட்ட கழல்கள் ஒலிக்குமாறு நடனம் ஆடுபவனும் ஆகிய பெருமான் உறையும் கடம்பூர் திருக்கோயிலை உள்ளத்தினில் நினைக்கும் அடியார்களின் வினைகள், பெருமானின் அருளால் நீங்கும்.