53. கொள்ளும் காதன்மை - பாடல் 9
படம் எடுத்தாடும் பாம்பினைப் போன்று
பணம் கொள் ஆடரவு அல்குல் பகீரதி
மணம் கொளச் சடை வைத்த மறையவன்
வணங்கு மா மயிலாடுதுறை அரன்
அணங்கு ஓர் பால் கொண்ட கோலம் அழகிதே
விளக்கம்
பணம் = படம். அல்குல் = மார்பகம். அணங்கு = பெண், இங்கே பார்வதி தேவி. வணங்கு என்ற சொல்லினை அணங்கு என்ற சொல்லுடன் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். பெருமானை மயில் வடிவத்தில் உமையம்மை வணங்கி பயன்பெற்ற செய்த இங்கே சொல்லப்படுகின்றது. பகீரதி = கங்கையின் மற்றொரு பெயர். பகீரதனால் மண்ணுலகத்திற்கு வரவழைக்கப்பட்டமையால் இந்த பெயர் ஏற்பட்டது.
Advertisement
பொழிப்புரை
படம் எடுத்தாடும் பாம்பினைப் போன்று புடைத்த மார்பகங்களை உடைய பகீரதியைத் தனது சடையில் அடக்கி, தன்னை திருமணம் புரியவைத்தவன் சிவபெருமான். மறையே வடிவாக உள்ள பெருமானை, உமையம்மை தவம் செய்து வழிபட, அவளது தவத்திற்கு இரங்கி, தேவிக்கு தனது உடலில் ஒரு பாகம் கொடுத்த அழகிய வடிவினன், மயிலாடுதுறையில் உள்ள பெருமான் ஆவார்.