ஜனவரி
10 ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த "கேம் சேஞ்சர்' உலக அளவில் 203 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது.
14 நடிகர் வெங்கடேஷின் சங்கராந்தி அதிக வசூல் செய்த படமாக மாறியது.
பிப்ரவரி
14 பாலிவுட் வெளியீடாக வந்த "சாவா' இந்தியாவில் 121 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்தியாவில் 600 கோடி ரூபாய் நிகர வசூலைத் தாண்டிய முதல் படம் இது.
17 சீன அனிமேஷன் நெஜா 2 உலக அளவில் அதிக வசூல் செய்த அனிமேஷன் படமாக மாறியது. பாக்ஸ் ஆபீஸில் 12.3 பில்லியன் வசூல் செய்தது. இது உலக அளவில் எட்டாவது அதிக பாக்ஸ் ஆபீஸ் படமாக அமைந்தது.
21 பிரதீப் ரங்கநாதன் நடித்த "டிராகன்', பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்தது. உலக அளவில் ரூ.100 கோடி வசூலை அதிகாரபூர்வமாக தாண்டியது.
மார்ச்
9 இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய இசையமைப்பான சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் அரங்கேற்றினார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் ஆசிய இசைக் கலைஞர் இவர்தான்.
10 தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் நிறுவனம் நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. பாடல் விவகாரத்தில் ரூ.1 கோடி கேட்டு வழக்கு தொடரப்பட்டது.
27 அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றது எம்பூரான்.
30 எம்பூரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்து வந்த காட்சிகளுக்கு வலதுசாரி குழுக்களிடமிருந்து வந்த குறிப்பிடத்தக்க எதிர்வினைக்கு நடிகர் மோகன்லால் மன்னிப்பு தெரிவித்தார்.
ஏப்ரல்
10 அஜித் நடித்த "குட் பேட் அக்லி' குறிப்பிடத்தக்க பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெற்று, 247.42 கோடி ரூபாய் வசூலித்தது. இது அஜித் குமாரின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாக மாறியது.
15 குட் பேக் அக்லி படத்தில் தன் பாடலைப் பயன்படுத்தியதற்காக அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா.
25 மோகன்லால் நடித்த "துடரும்' படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெற்றது. உலக அளவில் ரூ.234- ரூ.235 கோடியை வசூலித்தது. இது கிட்டத்தட்ட ரூ.28 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது.
மே
1 தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என அறிவித்தார் நடிகர் அஜித்குமார்.
7 ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று பதிவு செய்தார் நடிகர் ரஜினிகாந்த்.
30 கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக கர்நாடகத்தில் தக் ஃலைப் படத்துக்கு தடை விதித்தது கன்னட திரைப்பட சபை.
ஜூன்
17 கன்னட மொழி குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதை நடிகர் கமல்ஹாசன் நிராகரித்தார்.
ஜூலை
15 பாலிவுட் படமான "சயாரா' 2025- ஆம் ஆண்டில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது. இது ரூ.579 கோடிக்கும் அதிகமான வசூலுடன் அந்த ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த ஹிந்தி படமாக மாறியது.
23 அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையை எஃப் 1 பெற்றது. இந்திய பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.
ஆகஸ்ட்
14 ஹிர்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான பாலிவுட் படமான "வார் 2' எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
செப்டம்பர்
16 பழம்பெரும் நடிகை எம்.என். ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் சங்கம் அறிவித்தது.
21 அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது நடவடிக்கை தேவை என்று பேசினார் நடிகர் வடிவேலு.
நவம்பர்
7 நான் விஜய்க்கு எதிரானவன் அல்ல என்று அறிவித்தார் நடிகர் அஜித்.
டிசம்பர்
10 சென்னை சர்வதேச திரைப்பட விழா துவங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.