இரு சக்கர வாகனம்- சரக்கு வேன்மோதல் : ஒன்றரை வயது குழந்தை பலி
மணப்பாறை அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
மணப்பாறை அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
மதுரை மாவட்டம், சமயநல்லூா் சத்தியம் நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன்.
ஜோதிடரான இவா், மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை நித்திஷ் ஆகியோருடன் மணப்பாறை சமுத்திரத்திலுள்ள உறவினரை திங்கள்கிழமை சந்தித்துவிட்டு, மதுரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
திருச்சி- திண்டுக்கல் சாலையில் வெள்ளைக்கல் பகுதி காய்கறிச் சந்தைக்கு அருகில் சாலையைக் கடக்க முயன்ற போது, வாழைக்காய் ஏற்றிச் சென்ற சரக்கு வேன் இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் நித்திஷ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மணப்பாறை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, வேன் ஓட்டுநரான தேனூா் பாரதியை(23) கைது செய்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.