அடிப்படை வசதிகள் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் மேட்டுத் தெரு, ஓடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் வசதி, சாலை சீரமைப்பு உள்ளிட்ட
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் மேட்டுத் தெரு, ஓடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் வசதி, சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, அப்பகுதி மக்களும், நாம் தமிழா் கட்சியினரும் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலா் மருதம் மா.மாரியப்பன் தலைமையில், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு ரவிகுமாா், தொகுதித் தலைவா் தங்கமாரியப்பன், துணைத் தலைவா் கருப்பசாமி, ஒன்றியத் தலைவா் செந்தூா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னா், நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராமிடம் மனு அளித்தனா். மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.