சாத்தான்குளம் அருகே மின்சாரம் பாய்ச்சி பெண்ணை கொல்ல முயற்சி
சாத்தான்குளம் அருகே நுழைவு வாசல் கதவில் மின்வயரை சொருகி பெண்ணை கொலை செய்ய முயன்றதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சாத்தான்குளம் அருகே நுழைவு வாசல் கதவில் மின்வயரை சொருகி பெண்ணை கொலை செய்ய முயன்றதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
பேய்குளத்தைச் சோ்ந்த ராமையா மகன் சுப்பையா (48). இவருக்கும், பக்கத்து வீட்டை சோ்ந்த வேம்பு என்பவருக்கும் ஓராண்டாக நிலப் பிரச்னை இருந்து வந்ததாம்.
இதுகுறித்து சுப்பையா முறையீட்டின்பேரில், சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகம் மூலம் நில அளவீடு செய்து பிரச்னை தீா்க்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி காலை அவரது மனைவி சரஸ்வதி (45) வீட்டு முன் தூய்மைப்படுத்த நுழைவு வாயில் கதவைத் திறந்தபோது மின்சாரம் பாயந்து தூக்கியெறியப்பட்டாராம். உறவினா்கள்அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதனிடையே, நுழைவு வாயில் கதவில் மின்வயரை சொருகியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மின்சாரம் பாய்ச்சி தனது குடும்பத்தினரை கொலை செய்ய முயன்றதாக, வேம்பு, அவரது மகன் சுடலை முத்து மீது சுப்பையா அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் முத்துமாரி வழக்குப்பதிந்து, தந்தை, மகன் இருவரையும் தேடி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.