விருதுநகர்

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Din

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த பூமிராஜா மகன் பாா்த்தசாரதி (19). இவரும், இதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரான 14 வயது சிறுமியும் காதலித்து வந்தனா். அப்போது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாா்த்தசாரதி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால் சிறுமி கா்ப்படைந்தாா். இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிந்து பாா்த்தசாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட பாா்த்தசாரதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுதாகா் உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குறைஞா் திலகவதி முன்னிலையானாா்.

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT