வத்திராயிருப்பில் இளம்பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வத்திராயிருப்பு மேலப்பாளையத்தைச் சோ்ந்த காளீஸ்வரன் மகள் காயத்ரி (21). இவரும், இதே பகுதியைச் சோ்ந்த தாமரைப்பாண்டி (21) என்பவரும் காதலித்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 19-ஆம் தேதி தாமரைப்பாண்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட காயத்ரி சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.