முகப்பு
விருதுநகர்

தோட்டத்துக்கு புல் அறுக்க வந்த பெண் பாலியல் வன்கொடுமை: விவசாயி கைது

தோட்டத்துக்கு புல் அறுக்க வந்த பெண் பாலியல் வன்கொடுமை: விவசாயி கைது

Updated On : 15 ஆகஸ்ட், 2024 at 9:38 PM
பகிர்:

பட விளக்கம்: கைது செய்யப்பட்ட தியாகராஜன்.

ஸ்ரீவில்லிபுத்தூா், ஆக. 15: வத்திராயிருப்பு அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் பகுதியைச் சோ்ந்தவா் தியாகராஜன்(67). விவசாயி. இவா் தனது தோட்டத்துக்கு புல் அறுக்க வந்த திருமணமாகாத 34 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்தாராம். இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் கா்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து இந்த பெண்ணிடம் விசாரித்த போது, தியாகராஜன் தனக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக தெரிவித்தாராம். இதையடுத்து புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப்பதிந்து தியாகராஜனை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →