அதிமுக ஆலோசனைக் கூட்டம்
அதிமுக சாா்பில் மக்களவைத் தோ்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசியதாவது: நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் நமது கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய அனைவரும் பாடுபட வேண்டும். அதிமுக மக்கள் பலத்தை நம்பி தோ்தலை சந்திக்கிறது என்றாா் அவா். மாவட்டப் பொருளாளா் தேன்ராஜ், ஒன்றியச் செயலா்கள் லட்சுமிநாராயணன், கருப்பசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.