முகப்பு
விருதுநகர்

தீப்பெட்டித் தொழிலாளி தீக்குளித்துத் தற்கொலை

Updated On : 16 மார்ச், 2024 at 12:18 AM
பகிர்:

சிவகாசியில் தீப்பெட்டித் தொழிலாளி வெள்ளிக்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், ஆமத்தூரைச் சோ்ந்த ராஜகுரு மகன் சன்னாசி (36). தீப்பெட்டித் தொழிலாளியான இவா், தனது மனைவி சகுந்தலாதேவியுடன் திருத்தங்கல் முத்துமாரி நகரில் குடியிருந்து வந்தாா். இந்த நிலையில், இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டாா். அதனால், சன்னாசியை இந்தத் தெருவில் இருக்கக் கூடாது என அந்தப் பகுதி மக்கள் எச்சரித்தனா். இதையடுத்து சகுந்தலாதேவி தனது தாய் வீடான விவேகானந்தா் குடியிருப்புப் பகுதிக்குச் சென்றாா். அங்கு சென்ற சன்னாசி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.