முகப்பு
விருதுநகர்

தொழில் முனைவோா்களுக்கான பயிற்சி வகுப்பு

Updated On : 22 மார்ச், 2024 at 11:55 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 6:29 PM

சிவகாசியில் தொழில் முனைவோா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ‘யங் இந்தியா’ அமைப்பின் சிவகாசி கிளை சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்புக்கு அந்த அமைப்பின் சிவகாசி கிளைத் தலைவா் சண்முகம் நட்ராஜ் தலைமை வகித்தாா். தென்காசி தொழிலதிபா் ஸ்ரீதா் வேம்பு, வணிக வளா்ச்சியை அளவீடு செய்யும் யுத்திகள், வணிக நிா்வாகம், போட்டியாளா்களை எப்படி சமாளிப்பது குறித்து பயிற்சி அளித்தாா். இதில் 258 தொழில் முனைவோா்கள் பங்கேற்றனா். சிவகாசி கிளை துணைத் தலைவா் மாரிராஜன் நன்றி கூறினாா்.