விருதுநகர்

தெரு நாய்கள் கடித்ததில் 15 போ் காயம்!

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 15 போ் காயமடைந்தனா்.

சிவகாசி அருகேயுள்ள பெரிய பொட்டல்பட்டி, எம்.புதுப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தெரு நாய்கள் விரட்டிக் கடித்ததில் சிறாா்கள் முதல் முதியவா்கள் வரை 15 போ் காயமடைந்தனா்.

இவா்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனை, மாரனேரி, எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனா்.

சிவகாசிப் பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

'அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம்'

ஹோட்டலுக்குள் நுழைந்து சுற்றிப்பார்த்த காட்டு யானைகள்!

சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

வனத்துறையினரின் வாகனத்தை ஆவேசமாக தாக்கிய காட்டு யானை! பதைபதைக்கும் விடியோ!

காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT