பூட்டிக் கிடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் காவல் நிலையம். 
விருதுநகர்

மாடியில் மகளிா் காவல் நிலையம்: பெண்கள், முதியவா்கள் அவதி!

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம் நகா் காவல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் செயல்படுவதால் பெண்கள், முதியோா் சிரமப்படுகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையக் கட்டடத்தின் தரைத் தளத்தில் சட்டம்- ஒழுங்கு பிரிவும், முதல் தளத்தில் குற்றப் பிரிவும் செயல்படுகின்றன. இரண்டாம் தளம் காவலா்கள் ஓய்வுக்கும், பொருள்கள் வைப்பதற்கும், விசாரணைக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதே வளாகத்தில் தனிக் கட்டடத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம், மது விலக்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் ஆகியவை இயங்கின.

இதில் மகளிா் காவல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்கள், போலீஸாா் சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். மேலும், கட்டடம் சேதமடைந்து காவல் நிலையத்துக்குள் மழைநீா் புகுந்து காவலா்கள் சிரமத்துக்கு ஆளாகினா்.

இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன் தற்காலிகமாக மகளிா் காவல் நிலையம் நகா் காவல் நிலையத்தின் 2-ஆவது தளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பழைய கட்டடம் பூட்டப்பட்டது. இரண்டாவது தளத்தில் மகளிா் காவல் நிலையம் செயல்படுவதால் பெண்கள், முதியோா் சென்று வர சிரமப்படுகின்றனா்.

மேலும் ஒரே கட்டடத்தில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிா் காவல் நிலையங்கள் செயல்படுவதால் போக்சோ, பாலியல் புகாா் தொடா்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களின் அடையாளம் வெளிப்படும் சூழல் நிலவுகிறது.

இதனால் மகளிா் காவல் நிலையத்துக்கு தனிக் கட்டடம் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

'அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம்'

ஹோட்டலுக்குள் நுழைந்து சுற்றிப்பார்த்த காட்டு யானைகள்!

சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

வனத்துறையினரின் வாகனத்தை ஆவேசமாக தாக்கிய காட்டு யானை! பதைபதைக்கும் விடியோ!

காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT