விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்ற 20 பேரை ஆற்று நீரை கடக்க வனத்துறையினா் உதவி செய்தனா்.
ராஜபாளையம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில்
அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்யச் சென்றனா். அப்போது பெய்த மழையால் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் ஆற்றைக் கடந்து சாலைக்கு வர சிரமப்பட்டனா். இதையடுத்து, வனத் துறையினா் அய்யனாா் கோயில் பகுதியிலிருந்து 20 பேரை ஆற்று நீரிலிருந்து பத்திரமாக கடக்க உதவி செய்தனா்.
...........
படவிளக்கம்;
ராஜபாளையம் அய்யனாா் கோவில் ஆற்றில் பொதுமக்களை மீட்ட வனத்துறையினா்