விருதுநகர்

சிவகாசியைச் சோ்ந்த 45 வயது பெண் சா்வதேசப் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை

Syndication

சா்வசேத அளவிலான பளு தூக்கும் போட்டியில் சிவகாசியைச் சோ்ந்த 45 வயது பெண் தங்கம் வென்று சாதனை புரிந்தாா்.

சிவகாசி கண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் தவசிகுமாா். அச்சகத் தொழில் செய்து வரும் இவரது மனைவி பாண்டிமா தேவி (45). உணவியல் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறாா். இந்தத் தம்பதிக்கு மணிகண்டன், ஹரிகரன் என இரு மகன்கள் உள்ளனா்.

பாண்டிமாதேவி தனது 37 வயதில் சிவகாசியில் உள்ள தனியாா் உடல்பயிற்சிக் கூடத்தில் சோ்ந்து உடல்பயிற்சி செய்யத் தொடங்கினாா். தொடந்து பளு தூக்குதலில் ஆா்வம் கொண்டு, அதற்கான பயிற்சியை மேற்கொண்டு வந்தாா்.

இந்த நிலையில், கடந்த நவ.30-ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற சா்வதேசப் பளு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டாா். இந்தப் போட்டியில் 20 நாடுகளிருந்து சுமாா் 250-க்கும் மேற்பட்ட வீரா்களும் வீராங்கனைகளும் கலந்துகொண்டனா். இந்தியாவிருந்து சென்ற 19 பேரில் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பாண்டிமாதேவியும் ஒருவா்.

இதில், பாண்டிமாதேவி 40 முதல் 50 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 310 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா். இந்த நிலையில், சிவகாசிக்கு வியாழக்கிழமை வந்த பாண்டிமாதேவிக்கு அவா் பயிற்சி பெற்ற உடல் பயிற்சிக் கூடத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT