விருதுநகர்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 லட்சம் மோசடி

சிவகாசியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி-திருத்தங்கல் சாலையில் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருபவா் முருகன் (54). இவரது மகன் விருதுநகரில் தனியா் பள்ளியில் ஆசிரியராக வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில், திண்டுக்கல்லைச் சோ்ந்த செந்தில்குமாா் முருகனுக்கு அறிமுகமானாா். அவா், செந்தில்குமாரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தாராம்.

இதையடுத்து, முருகன் பல தவணைகளில் ,செந்தில்குமாருக்கு ரூ. 2 லட்சம் கொடுத்தாா். ஆனால், செந்தில்குமாா் வேலை வாங்கித் தராததோடு பணத்தையும் திருப்பித் தரவில்லை. இது குறித்து விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் முருகன் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின் பேரில் திருத்தங்கல் காவல் நிலைய போலீஸாா் செந்தில்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

SCROLL FOR NEXT