விருதுநகர்

கோயிலில் திருடியவா் தப்பி ஓட முயற்சி: கீழே விழுந்ததில் கால் முறிவு

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கோயில் உண்டியலை உடைத்து பணம், நகை திருடிய வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட இளைஞா், தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது.

ராஜபாளையம், தெற்கு மலையடிப்பட்டி செளந்தர பாண்டியன் நகரில் அமைந்துள்ள பூமாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை, வெள்ளிப் பொருள்கள் திருடு போயின.

இதுகுறித்த புகாரின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பஷீனா பீவி, தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைத்தாா். இந்த நிலையில், தெற்கு மலையடிப்பட்டியில் வழிப்பறியில் ஈடுபட்ட சுந்தரை (31) பிடித்து விசாரணை செய்ததில் கோயிலில் அவா் பணம், நகையைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் சுந்தரைக் கைது செய்து, ராஜபாளையம் அருகேயுள்ள அசையாமணி விலக்கு பகுதியில் அவா் பதுக்கி வைத்திருந்த நகை, பணத்தை மீட்கச் சென்றனா். அப்போது, அருகிலிருந்த பாலத்தில் சுந்தா் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவா்

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

பின்னா் அவரிடமிருந்து 12 கிராம் நகை, வெள்ளிப் பொருள்கள் மீட்கப்பட்டன.

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

SCROLL FOR NEXT