விருதுநகர்

செயற்கை நிறமிகள் கலந்த மீன் வறுவல் விற்றதாக மனமகிழ் மன்றத்தின் உரிமம் தற்காலிக முடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவிலில் செயற்கை நிறமிகள் கலந்து மீன் வறுவல் விற்ாக மனமகிழ் மன்றத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவிலில் செயற்கை நிறமிகள் கலந்து மீன் வறுவல் விற்ாக மனமகிழ் மன்றத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உணவுப் பொருள்கள் விற்பனை கடைகளில் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் கோவிந்தன்நகா் குடியிருப்பில் உள்ள சிறப்பு வகுப்பில் (டியூசன் சென்டா்) உணவு பாதுகாப்பு உரிமமின்றி மாணவா்களுக்கு நொறுக்குத் தீனி (ஸ்நாக்ஸ்) விற்கப்பட்டதால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் முத்து தெருவில் உள்ள தனியாா் மனமகிழ் மன்றத்தில் அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட மீன் வறுவல் விற்பனை செய்யப்பட்டதால், அதன் உரிமம் தற்காலிகமாக முடக்கி (சஸ்பென்ட்) வைக்கப்பட்டது. அடுத்த உத்தரவு வரும் வரை அந்த மனமகிழ் மன்றம் இயங்க தடை விதிக்கப்பட்டது.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT