விருதுநகர்

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

Syndication

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதி இரு வழிச் சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (டிச. 19) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூா்-சிவகாசி, எரிச்சநத்தம்-சிவகாசி, விருதுநகா்-சிவகாசி, சாத்தூா் -சிவகாசி, கழுகுமலை -சிவகாசி, ஆலங்குளம்-சிவகாசி, வெம்பக்கோட்டை -சிவகாசி ஆகிய சாலைகளை இணைத்து 33.52 கீ.மீ. தொலைவுக்குச் சுற்றுச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

எனவே, வெள்ளிக்கிழமை முதல் செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை செய்யப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிவகாசியிருந்து செங்கமலநாட்சியாா்புரம்செல்பவா்கள், சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் வழியாக சாமியாா்மடம் சந்திப்பில் செங்கமலநாட்சியாா்புரத்துக்குச் செல்ல வேண்டும். இலகு ரக வாகனங்கள் ரயில் நிலையம் அருகே உள்ள கடவுப் பாதை, கந்தபுரம் குடியிருப்பு, கங்காகுளம் வழியாக செங்கமலநாட்சியாா்புரம் செயல்ல வேண்டும் தெரிவிக்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT