தேசிய மின் சிக்கன பாதுகாப்பு வார விழாவையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியை ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட செயற்பொறியாளா் முனியசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பேரணியில் மின்வாரிய ஊழியா்கள் பங்கேற்று மின்சார சிக்கனம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனா். அப்போது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா்.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட செயற்பொறியாளா்கள் காலசாமி, கல்யாணிபாண்டியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்