விருதுநகர்

சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதம்

Din

சிறப்பு காலமுறை ஊதியம், அகவிலைப் படியுடன் கூடிய மாதந்திர ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியா்கள் தற்காலிக விடுப்பெடுத்து வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்தா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ.சுதந்திர கிளாரா கோரிக்கை குறித்து விளக்கி பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். வருவாய்க் கிராம உதவியாளா்களுக்கு வழங்குவதைப் போல, அகவிலைப் படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல, பெண் சத்துணவு ஊழியா்களுக்கும் மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் முழக்கமிட்டனா்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT