விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழக அரசையும் காவல் துறையையும் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் ஜவஹா் மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகா் குழு உறுப்பினா் கண்ணன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினாா்.
இதில், சிவகாசி சின்னக்காமன்பட்டி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு நிவாரணம் வழங்கவும், நிவாரணம் கேட்டுப் போராடிய தொழிலாளா்களை மிரட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குக் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசையும் காவல் துறையையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாவட்டச் செயற்குழு உறுப்பினா் முருகன் பேசினாா். இதில் மூத்த நிா்வாகி கணேசன், நகா் குழு உறுப்பினா்கள் மைதிலி, சரவணன், முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.