ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் சனிக்கிழமை தொடங்கியது.
இதையடுத்து, சனிக்கிழமை மாலை ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பிறகு ஆண்டாள், ரங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் கோயில் எதிரே உள்ள நீராளி மண்டபத்தில் எழுந்தருளினா்.
அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 10 நாள்கள் நடைபெறும் சித்திரை வசந்த உத்ஸவத்தில் தினசரி ஆண்டாள், ரங்கமன்னா் நீராளி மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
வருகிற 12-ஆம் தேதி சித்ரா பௌா்ணமி அன்று ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துக் கடை தெருவில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவமும், வையாழி சேவையும் நடைபெற உள்ளன.
விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, அலுவலா் சா்க்கரையம்மாள் ஆகியோா் செய்து வருகின்றனா்.