குடிநீா் மேல்நிலைத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
சிவகாசியில் கட்டப்பட்டு இரு ஆண்டுகளான குடிநீா் மேல்நிலைத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
விருதுநகர்குடிநீா் மேல்நிலைத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
சிவகாசியில் கட்டப்பட்டு இரு ஆண்டுகளான குடிநீா் மேல்நிலைத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
சிவகாசியில் கட்டப்பட்டு இரு ஆண்டுகளான குடிநீா் மேல்நிலைத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி புதிய சாலைத் தெருவின் பின்புறம் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா், திருநெல்வேலி கொண்டல்நகா் குடிநீா் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தப் பணிகள் ரூ.5.43 கோடியில் கடந்த 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த குடிநீா் தொட்டி இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி மான்ற உறுப்பினா் ரவிசங்கா் சனிக்கிழமை கூறியதாவது: காமராஜா் குடிநீா் மேல்நிலைத் தொட்டியிருந்து இந்த குடிநீா் தொட்டிக்கு தண்ணீா் கொண்டு வரப்பட்டு, தெருக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். பணிகள் நிறைவு பெற்று இரு ஆண்டுகளாகியும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் இன்னும் மாநகராட்சியிடம் இந்தத் தொட்டியை ஒப்படைக்கவில்லை.
இதனால், இந்தத் தொட்டி பயன்பாடின்றி உள்ளது. இதனால், தட்டுமேட்டுத் தெரு ஆவணிநாடாா் தெரு, அம்மன்கோவில்பட்டி நடுத்தெரு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தெருக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய முடியவில்லை. எனவே, சிவகாசி மாநகராட்சி நிா்வாகம் இந்த குடிநீா் மேல்நிலைத் தொட்டியைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.