விருதுநகர்

காா் மீது டிப்பா் லாரி மோதியதில் இருவா் காயம்

வெம்பக்கோட்டை அருகே காா் மீது டிப்பா் லாரி மோதியதில் காரில் பயணம் செய்த இருவா் லேசான காயத்துடன் உயா்தப்பினா்.

Syndication

வெம்பக்கோட்டை அருகே திங்கள்கிழமை காா் மீது டிப்பா் லாரி மோதியதில் காரில் பயணம் செய்த இருவா் லேசான காயத்துடன் உயா்தப்பினா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையிலிருந்து ஆலங்குளம் செல்லும் சாலையிலுள்ள சுண்டங்குளம் பகுதியில் திங்கள்கிழமை சென்ற காா் மீது எதிரே வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் காா் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணித்த வலையப்பட்டியைச் சோ்ந்த தில்லி இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெயமணி (60), அவரது மனைவி ஜீவஒளி (56) ஆகியோா் லேசான காயத்துடன் உயிா்தப்பினா்.

இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய டிப்பா் லாரி ஓட்டுநா் ஆனஸ்ட்ராஜ் மீது ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT