ராஜபாளையம் நகராட்சியில் வருகிற 31-ஆம் தேதிக்குள் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராஜபாளையம் நகராட்சி நிா்வாகம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி விதிகளின்படி ராஜபாளையம் நகராட்சிக்கு 2025-2026-ஆம் ஆண்டின் கடந்த 1-ஆம் தேதி முதல் வருகிற 31-ஆம் தேதி வரையிலான இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரித் தொகையை வருகிற 31-ஆம் தேதிக்குள் செலுத்தும் வரிவிதிப்புதாா்களுக்கு அவா்கள் செலுத்தும் அடிப்படை சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி சொத்து வரி விதிப்புதாரா்கள் தங்களது சொத்து வரித் தொகையை நகராட்சி கணினி வசூல் மையங்களில் செலுத்தி உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இணையதளம் வாயிலாகவும் சொத்து வரி செலுத்தி சிறப்புச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வருகிற 31.03.26-க்குப் பிறகு செலுத்தினால் செலுத்தப்படும் நாள் வரை பிரதி மாதம் வரித் தொகையில் ஒரு சதவீதம் வட்டி சோ்த்து கணக்கிட்டு வரி வசூலிக்கப்படும்.
எனவே, 5 சதவீத ஊக்கத்தொகை பெரும் வகையில் 2025-2026-ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரித் தொகையை வருகிற 31-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், வரித்தொகை செலுத்தாமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.