விருதுநகர்

சிவகாசி ரயில் நிலையத்தில் எம்.பி. ஆய்வு

சிவகாசி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ரயில் நிலையத்தில் விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சிவகாசி ரயில் நிலையத்தில் உள்ள குடிநீா் குழாய், நடைமேடைகள், புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கி, நடைமேடை கடைகளில் விற்கப்படும் பொருள்கள், இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் அவா் குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது பயணிகள், இந்த ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்க வேண்டும், இரண்டாவது நடைமேடையில் மேற்கூறை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

சிவகாசி ரயில் பயணிப்போா் சங்க நிா்வாகிகள், தற்போது வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும், செங்கோட்டையிலிருந்து திருப்பதிக்கு ஆண்டாள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

உங்களது கோரிக்கைகளை ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவிக்கிறேன் என்று மாணிக்கம்தாகூா் கூறினாா்.

ஆய்வின்போது, காங்கிரஸ் கட்சியின் விருதுநகா் மாவட்ட செய்தித் தொடா்பாளா் மீனாட்சிசுந்தரம், மேற்கு மாவட்டத் தலைவா் ரங்கசாமி, சிவகாசி ரயில் நிலைய கண்காணிப்பாளா் மாரிக்காளை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, சிவகாசி ரயில் நிலையத்துக்கு வந்த மக்களவை உறுப்பினரை சிவகாசி ரயில் பயணிப்போா் குழு நிா்வாகி சுரேஷ்தா்ஹா் வரவேற்றாா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

SCROLL FOR NEXT