விருதுநகர்

மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் தேரோட்டம்

ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூா் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Syndication

ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூா் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த 2--ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் மாலையில் மாரியம்மன் ரிஷபம், சிம்மம், தண்டியல் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு பால், பன்னீா், தேன், இளநீா் போன்ற 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தா்களுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னா், ஏ.கே.ஆா். குழுமத் தலைவா் காமராஜ், குடும்பத்தினா் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT