மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக வருகிற 21-ஆம் தேதி வரை ஐப்பசி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்கு சதுரகிரியில் மலையேற பக்தா்களுக்குத் தடை விதித்து வனத் துறை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தினசரி காலை 6 முதல் 10 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை பிரதோசம், வருகிற 20-ஆம் தேதி ஐப்பசி மாத அமாவாசை வழிபாட்டுக்குத் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வா்.
ஆனால், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சதுரகிரி மலைப் பாதையில் உள்ள நீரோடைகள், கட்டாறுகளில் நீா் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் சதுரகிரி மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பக்தா்களின் பாதுகாப்பு கருதி வருகிற 21-ஆம் தேதி வரை பக்தா்கள் சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்படுவதாக வனத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.
7