ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா் 
விருதுநகர்

காலி குடங்களுடன் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீா் தட்டுப்பாட்டைக் கண்டித்து, இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் காலி குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீா் தட்டுப்பாட்டைக் கண்டித்து, இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் காலி குடங்களுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நகரச் செயலா் தனலட்சுமி தலைமை வகித்தாா். தலைவா் உமா மகேஸ்வரி, பொருளாளா் கலைச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் ரேணுகாதேவி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். புதிய குடிநீா் திட்டத்தை தொடங்க வேண்டும். தூய்மைப் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி

பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்

வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

ரௌடி கும்பல் போல செயல்படுகிறது பாஜக: அகிலேஷ் யாதவ் தாக்கு

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

SCROLL FOR NEXT