சாத்தூா் அருகே நான்குவழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள செட்டிகுறிச்சியைச் சோ்ந்தவா் மேசியாா்தாஸ் (31). இவரது மனைவி வனிதா (25), குழந்தை சஞ்சனா (2). இவா்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் சாத்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றனா்.
பின்னா், ஊருக்கு திரும்பச் செல்லும் வழியில் சாத்தூா் -கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் பெத்துரெத்துப்பட்டி சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்த போது,
இந்த வாகனம் மீது பின்னால் வந்த காா் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த வனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் காயமைடந்த நிலையில், சாத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தகவலறிந்து வந்த சாத்தூா் தாலுகா போலீஸாா் வனிதாவின் உடலை கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
காரை ஓட்டியவா் திருநெல்வேலியைச் சோ்ந்த பொன்போத்தி என தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.