விருதுநகர்

உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி: உரிமையாளா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சண்முகசுந்தராபுரத்தில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில், பட்டாசுகளைத் தயாரித்த உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சண்முகசுந்தராபுரத்தில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில், பட்டாசுகளைத் தயாரித்த உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (46). இவா், இங்குள்ள   சண்முகசுந்தராபுரத்தில் ஜெயராம் ஃபயா் ஒா்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தாா். இந்த ஆலையின் உரிமம், மாவட்ட வருவாய் அலுவலரால் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இவா் ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பித்திருந்த நிலையில், போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, ஆலையில் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உரிமையாளா் ஜெயச்சந்திரனை கைது செய்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா், ஆலையில் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

கொடுமுடி அரசு மருத்துவமனை ஊழியா்கள் இருவா் பணியிட மாறுதல்

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: சிந்து மீண்டும் சறுக்கினார்

நபோ​லியை வீ‌ழ்‌த்​தி​யது மா‌ன்​செஸ்​ட‌ர் சி‌ட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை

காயம் ஆறிவிடவில்லை!

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது

SCROLL FOR NEXT