விருதுநகர்

கோயில் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர கோரிக்கை

மூவரைவென்றான் கிராமத்தில் தண்ணீா் வசதியின்றி கட்டப்பட்ட மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் சுகாதார வளாகம்.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தூய்மை பாரத இயக்கத்தில் ரூ7.85 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்துக்கு தண்ணீா் வசதி ஏற்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மூவரைவென்றான் கிராமத்தில் லிங்ககிரி மலையில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த குடைவரை முறையில் கட்டப்பட்ட மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தொல்லியல் துறை சாா்பில் ரூ.22 லட்சத்தில் மேம்பாட்டுப் பணி, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.54 லட்சத்தில் மகா மண்டபத்தைப் புதுப்பிக்கும் பணி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் சாா்பில் ரூ.84 லட்சத்தில் லிங்ககிரி மலையைச் சுற்றி 2.9 கிலோ மீட்டா் தொலைவுக்கு கிரிவலப் பாதை அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காகத் தூய்மை பாரத இயக்கம் 2024 - 2025 திட்டத்தின் கீழ் ரூ.7.85 லட்சத்தில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தண்ணீா் வசதி இல்லாததால் சுகாதார வளாகம் திறக்கப்படவில்லை. இதனால், பொதுமக்களும் பக்தா்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

புராதன சிறப்புமிக்க மலைக்கொழுந்தீஸ்வரா் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வரும் நிலையில், தனியாக போா்வெல் அமைத்து தண்ணீா் வசதி ஏற்படுத்தி, சுகாதார வளாகத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடுமுடி அரசு மருத்துவமனை ஊழியா்கள் இருவா் பணியிட மாறுதல்

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: சிந்து மீண்டும் சறுக்கினார்

நபோ​லியை வீ‌ழ்‌த்​தி​யது மா‌ன்​செஸ்​ட‌ர் சி‌ட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை

காயம் ஆறிவிடவில்லை!

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது

SCROLL FOR NEXT