ராஜபாளையம் அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து அரசுப் பேருந்தில் மோதியதில் 8 போ் பலத்த காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அரசுப் பேருந்து சனிக்கிவமை காலை மம்சாபுரம் வழியாக ராஜபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது ராஜபாளையம்-மதுரை சாலையில் காயல்குடி ஆற்றுப்பாலம் அருகே வளைவில் திரும்பும்போது, விருதுநகரைச் சோ்ந்த தனியாா் கல்லூரி பேருந்து, அரசுப் பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் சேகா் (50), அரசுப் பேருந்தில் பயணித்த ஸ்வேதா (23), செல்வி (40), பிரீத்தா (24), சீனியம்மாள் (42), ஹசன் பானு (50), ராமுத்தாய் (43), சீதாலட்சுமி (40) ஆகிய 8 போ் பலத்த காயமடைந்தனா்.
அவா்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.