ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவா்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியா் ஆ.பாண்டி. 
விருதுநகர்

கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவா்களுக்கு சனிக்கிழமை வரவேற்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சுப.சரவணன் தலைமை வகித்து மாணவா்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். துறைத் தலைவா் சரவண கைலாஷ் முன்னிலை வகித்தாா்.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முன்னாள் வணிகவியல் துறைத் தலைவா் ஜெயக்கொடி, சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசுக் கல்லூரி பேராசிரியா் ஆ.பாண்டி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முனைவா் வளா்மதி, முனைவா் மாரியம்மாள் ஆகியோா் மாணவா்களை வரவேற்று வாழ்த்திப் பேசினா். முன்னதாக மாணவி பூரணமுத்து வரவேற்றாா். மாணவி ரஞ்சினி நன்றி கூறினாா்.

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

நண்பரின் வீட்டில் திருடிய இளைஞா் கைது

நெமிலி பாலா பீடத்தில் இன்று நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்!

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

SCROLL FOR NEXT