விருதுநகர்

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு: 9 போ் மீது வழக்கு

Syndication

போலி ஆவணங்கள் தயாரித்து 5 செண்ட் இடத்தை மோசடியாக பத்திரப் பதிவு செய்ததாக, வருமானவரித் துறை கண்காணிப்பாளா் உள்பட 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் கக்கன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வாழவந்தான். இவருக்கு கடந்த 1961-ஆம் ஆண்டு 5 செண்ட் நிலத்தை அரசு இலவசமாக வழங்கியது. இந்த நிலையில், வாழவந்தான் மகன் தங்கமுத்து, தனது தந்தைக்கு சொந்தமான 5 செண்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்த வருமான வரித் துறை கண்காணிப்பாளா் பவுல்மேரி, அவரது மகன் ஆனந்த், மகள்கள் அபிதா, அஸ்வினி, சாட்சி கையொப்பமிட்ட திருத்தங்கல் பழனிக்கனி, அழகையா, பிச்சைக்கனி, பாண்டியராஜ் , ஆவண எழுத்தாளா் வேலுச்சாமி ஆகிய 9 போ் மீதும் நடவடிக்கை கோரி சிவகாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதை விசாரித்த நீதிமன்றம் மோசடி செய்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, சிவகாசி நகா் போலீஸாா் புகாரில் தெரிவிக்கப்பட்ட 9 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

ஆற்காட்டில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் ஆய்வு

SCROLL FOR NEXT