விருதுநகர்

புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு சீல்; முதியவா் கைது

Syndication

சிவகாசியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெட்டிக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

சிவகாசி காத்தநாடாா் தெருவில் உள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிவகாசி நகா் காவல் நிலைய ஆய்வாளா் செல்வக்குமாரி உத்தரவின்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த காயாம்பு (82), அவரது பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்துவந்ததை போலீஸாா் கண்டறிந்தனா்.

தகவல் அறிந்து வந்த சிவகாசி உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் ரகுநாதன், சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெட்டிக் கடைக்கு சீல் வைத்தாா். இதுகுறித்து சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காயாம்புவைக் கைது செய்தனா்.

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

மங்கோல்புரியில் சிறுவன் அடித்துக் கொலை

SCROLL FOR NEXT