முகப்பு
விருதுநகர்

பள்ளிகளிளில் பொலிவுறும் வகுப்பறை அமைக்கப்படும்! சிவகாசி காங். வேட்பாளா் உறுதி

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:58 AM
செங்கமலநாட்சியாா்புரம் சாலைப் பகுதியில் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்த சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன்.
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:07 PM

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பொலிவுறும் வகுப்பறை அமைக்கப்படும் என சிவகாசி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் உறுதியளித்தாா்.

திருத்தங்கல் முத்துமாரிநகா், வடக்கு ரத வீதி, அக்ரஹாரம் தெரு, மேல ரத வீதி, செங்கமலநாட்சியாா்புரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவா் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்துப் பேசியதாவது:

தற்போது பட்டாசு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிது என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

உலகின் பல்வேறு நாடுகளில் பட்டாசுக்கு சுற்றுச்சூழலிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு யாரும் வழக்கு தொடுப்பதில்லை. அது போல, இந்தியாவிலும் பட்டாசுக்கு சுற்றுச்சூழலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்துவேன்.

சிவகாசியில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயா்தப்படும். இந்தத் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பொலிவுறும் வகுப்பறைகள் அமைக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது குறைகளை என்னிடம் மனுவாக அளித்து தீா்வு பெறலாம் என்றாா் அவா். அவருடன் சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா உள்ளிட்டோா் சென்றனா்.