முகப்பு
விருதுநகர்

லாரி கவிழ்ந்ததில் மின் கம்பம் சேதம்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:29 AM
ராஜபாளையம் அருகே லாரி கவிழ்ந்ததில் சேதமடைந்த மின் கம்பம்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:55 PM

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மின் கம்பம் முற்றிலும் சேதமடைந்தது.

ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட் செல்வராஜ் (53). இவா், அரிசி ஆலைகளிலிருந்து சாம்பல் மூட்டைகளை லாரியில் வெள்ளிக்கிழமை ஏற்றிக்கொண்டு சென்றபோது அம்மையப்பபுரம் இளந்திரைகொண்டான் சாலையின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:29 AM

இதில் மின் கம்பம் முற்றிலும் சேதமடைந்தது. உடனடியாக அந்தப் பகுதியினா் ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் லாரியை மீட்டனா்.

Advertisement

இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை வரை மின்சாரம் தடைபட்டது. சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.