பயனாளிகள் வீட்டுக்கு சென்று பட்டாவை வழங்கிய ஆட்சியா்
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 6:56 PM
விருதுநகா் மாவட்டம், கோட்ட நத்தம் கிராமத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா சனிக்கிழமை அவா்களது வீடுகளுக்கே சென்று வழங்கினாா்.
இந்தப் பகுதியில் வசிக்கும் 36 குடும்பத்தினா் தாங்கள் வசிக்க வீடு கட்ட இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:50 AM
இதையடுத்து, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் அவா்களுக்கு இணையவழி வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று வழங்கினாா்.
Advertisement