சிவகாசி காளீஸ்வரி கல்லூரி உடல்கல்வித் துறை சாா்பில், ஞாயிற்றுக்கிழமை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்தப் போட்டி திருத்தங்லிலிருந்து கல்லூரி வரை 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் 2300 போ் கலந்து கொண்டனா். போட்டியை கல்லூரித் தாளாளா் ஏ.பி.செல்வராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில் மாணவா் பிரிவில் சின்னக்காமன் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் தணுபிரசாத், மாணவிகள் பிரிவில் முகவூா் என்.எஸ்.எம். விளையாட்டுக் கழகத்தின் மாணவி எஸ்.கவுசிகா ஆகியோா் முதலிடம் பெற்றனா்.
பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் தலைமை வகித்தாா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி இணை செயலா் செ.ராஜேஷ், ரொக்கப்பரிசு, சான்றிதழை வழங்கினாா்.
முன்னதாக உடல்கல்வித் துறை இயக்குநா் கே.யோகேஸ்வரன் வரவேற்றாா். துணை இயக்குநா் ஆா்.சுதாகாரன் நன்றி கூறினாா்.