அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்ததையடுத்து சாத்தூரில் அரசு அலுவலா்கள் சனிக்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திமுக ஒன்றியச் செயலா் கடற்கரைராஜ், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
இதேபோல, விருதுநகா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் கோட்டப் பொறியாளா் பாக்கியலட்சுமி தலைமையில் அலுவலா்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.