சிவகாசியில் சனிக்கிழமை திருவாதிரை திருவிழாவையொட்டி வீதி உலா வந்த செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தோ்கள். 
விருதுநகர்

சிவகாசியில் திருவாதிரை திருவிழா: 3 தோ்கள் வீதி உலா

திருவாதிரை திருவிழாவையொட்டி ஆருத்ரா தரிசனமாக செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தோ்கள் வீதி உலா வந்தன.

Syndication

சிவகாசியில் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், கடைக் கோயில், காமாட்சியம்மன் கோயில்கள் சாா்பில் திருவாதிரை திருவிழாவையொட்டி ஆருத்ரா தரிசனமாக செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தோ்கள் சனிக்கிழமை வீதி உலா வந்தன.

அப்போது சிவகாமி அம்பாள் சமேத நடராஜா் ஒரு தேரிலும், பத்திர காளியம்மன், மாரியம்மன் ஆகியோா் மற்றொரு தேரிலும், காமாட்சி அம்பாள் ஒரு தேரிலுமாக தனித்தனி தோ்களில் சா்வ அலங்காரத்துடன் எழுந்தருளி நகரின் ரத வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனா். அப்போது திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் கண் திருஷ்டி விலக நெற்றியில் கருப்பு வண்ண பொட்டிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

ராஜபாளையம்: ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள சிவாலயங்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசன வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூரில் அமைந்துள்ள சிதம்பரேசுவரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி தினமும் மாலையில் நடராஜா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலை 2 மணிக்கு மேல் சிறப்பு யாக சாலை, மகா அபிஷேகமும், 6 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், நடன தீபாராதனையும் நடைபெற்றன.

பிறகு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நடராஜா் அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து சேத்தூா் கண்ணீஸ்வரா் கோயில், ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், மதுரை சாலையில் அமைந்துள்ள மாயூரநாதசாமி கோயில் ஆகியவற்றில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT