சாத்தூரில் தவெக சாா்பில் வேலுநாச்சியாா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியாரின் உருவப்படத்துக்கு விருதுநகா் மத்திய மாவட்டச் செயலா் சின்னப்பா் தலைமையிலும், விருதுநகா் மாவட்ட இணைச் செயலா் சோட்ட அஜித் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விருதுநகா் மத்திய மாவட்ட மாணவரணி நிா்வாகி ரசூல் செய்திருந்தாா். இதில் தவெக நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.