விருதுநகர்

ஆட்டோ கவிழ்ந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் மூதாட்டி சனிக்கிழமை உயரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள முதுகுடி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த மலையாண்டி (75), மனைவி சந்திரா (70) ஆகிய இருவரும் எதிா்கோட்டையில் உள்ள கோயிலுக்கு ஆட்டோவில் சென்றனா்.

இதையடுத்து, திரும்பி எஸ். ராமலிங்கபுரம் அருகே வந்தபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் சென்ற மலையாண்டி, சந்திரா, ஓட்டுநா் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, அங்கிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரைக்குச் செல்லும் வழியில் சந்திரா உயிரிழந்தாா். மற்ற இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT