முகப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகையை அகற்றியதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினா்.
விருதுநகர்

சாலை மறியலில் ஈடுபட்ட 27 போ் கைது

விருதுநகர்

சாலை மறியலில் ஈடுபட்ட 27 போ் கைது

Updated On : 23 ஜனவரி, 2026 at 9:23 PM
ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகையை அகற்றியதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினா்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையோரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகையை அகற்றியதைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துக்கடை சந்திப்பில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சாா்பில் அனுமதியின்றி 25-க்கு 10 அடி நீளத்தில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட இந்த விளம்பரப் பதாகையை அகற்றிய ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா், இதுதொடா்பாக தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் மணிவண்ணன் என்ற மாணிக் பாட்ஷா, நிா்வாகிகள் அப்துல் சித்திக் பாட்ஷா (38), ஷேக் முகமது (23) ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகையை அகற்றியதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகையை அகற்றியதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினா்.

இந்த நிலையில், விளம்பரப் பதாகையை அகற்றியதையும், வழக்குப் பதிவு செய்ததையும் கண்டித்து பேருந்து நிலையம் அருகே தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்தவா்கள் திடீரென வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுப்ட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →